நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் சிறு உதவியேனும் புரிதல் என்பது வரமாகும்.
அந்தவகையில் ,
பிரான்ஸில் வசிக்கும் ஜென்னி ஜெயச்சந்திரன் அவர்கள் எமது நிறுவனத்தினூடாக தாயக மக்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கிய (ரூ.70000.00) பணத்தில் சிறுவர்களுக்கான அப்பியாசப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது .
எமது தாயக மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் கொடையாளிகளிற்கும், தன்னார்வ பணியாளர்களிற்கும் , நிர்வாகத்தினரிற்கும் மற்றும் எமக்கு பக்க பலமாக இருக்கும் நல்லுள்ளங்களிற்கும் எமது அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
- 2021 மார்கழி மாதம் 15ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டவை....
(Kaluwankeny Methodist preschool and Grade 1)
- 2021 மார்கழி மாதம் 23 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டவை....
(Sivasakthy Pre-School Kaluwanchikudy )
- 2022 ஐப்பசி மாதம் 21 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டவை.... (ஆசிரியர் மற்றும் சிறுவர் தின விழா நிகழ்வின் போது)
(மணிப்புரம் விக்னேஸ்வரா வித்யாலயம் மட்டகளப்பு )
- 2022 கார்த்திகை மாதம் 17 ஆம் திகதி )
எமது நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர் அமரர் சுரேஸ் செல்வர்ணம் அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.
(வவுனியா )
நன்றி