நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் சிறு உதவியேனும் புரிதல் என்பது வரமாகும்.
அந்தவகையில் இன்றையதினம் (21.11.2021) எமது நிறுவனத்தின் தொண்டரும் இலண்டனில் எமது நிறுவனத்தின் உறவுப்பால செயற்பாட்டாளராகவும் செயற்படும் செல்லையா ஸ்ரீகரன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் பட்டிக்குடியிருப்பு கிராம பாடசாலையில் ஆண்டு 8 தொடக்கம் ஆண்டு 10 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கான அப்பியாசப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது . எமக்கு உறுதுணையாக இருந்த கொடையாளிகளிற்கும் நிர்வாகத்தினரிற்கும் மற்றும் எமக்கு பக்க பலமாக இருக்கும் நல்லுள்ளங்களிற்கும் எமது அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.